Wednesday, January 20, 2010

தெரிந்து கொள்வோமே - பெண் புலவர்கள்

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!
கேள்விப்பகுதிக்குச் செல்வோமா!!
1 ஔவையார் எழுதிய நூல்கள்  என்னென்ன?
2 காரைக்கால் அம்மையார் எழுதிய நூல்கள் என்னென்ன?
3 ஆண்டாள் பாடி எழுதிய நூல்கள் என்னென்ன?
4 ஹிந்து சமய வழிபாட்டில் ஈடுபட்ட வேறு சில பெண்களின் பெயர்கள் என்னென்ன?
5  அப்பெண்களின் படைப்புகள் என்னென்ன?


விடைகள்
1 ஆத்திச்சூடி , கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விநாயகர்  அகவல்  - வையார் என்ற பேரில் பலர்  பல்வேறு காலங்களில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. ஒளவையார்களின் பாடல்கள் அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களிலும் உள்ளன.
2 அற்புதத் திருவந்தாதி, திருவிரைட்டை மணிமாலை
3 திருப்பாவை, நாச்சியார் திருமொழி
4 காக்கைபாடினியார், பசலையார், பொன்முடியார்,பேயனார், இளவெயினி மற்றும்  பலர்.
5 பொன்முடியார்: சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி. இவரது கடமைப்பாட்டு என்ற தனிப்பாட்டுக்காக அறியப்படுகிறார்.
இளவெயினி: பரணர் காலத்தைச் சேர்ந்த பெண் புலவர் இவர். குறவர் சமுதாயத்தில் பிறந்த இவர் போர்க்களத்தில் பிணந்திண்ணும் பேய் மகளிரை வியந்து பாடிய சிறப்பால் “பேய்மகள்” என்கிற சிறப்புப் பெயருடன் பேய்மகள் இளவெயினி என்று அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய பாடல் ஒன்று (பாடல்:11) மட்டும் புறநானூற்றில் காணப்படுகிறது. பிற பாடல்கள் கிடைக்கவில்லை.
தொடரும்


8 comments:

Unknown said...

எனக்கு தெரியலை. நீங்களே எனக்கு mail பண்ணுங்க.
jaisankarj@gmail.com

குறிச்சி டைம்ஸ் said...

தங்களது படைப்புகளை படித்தேன் மிகவும் அருமை...

சென்னையை தலைமையிடமாக கொண்டு மார்ச் மாதம் முதல் ஆன்மிக இதழ் ஒன்றினை கொண்டு வர எங்களது குழு முடிவு செய்துள்ளது...

அதற்கு தங்களது படைப்புகளை தந்து ஆன்மிக பணியில் ஈடுப்படுத்தி கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம்.

தங்கள் மெயில் அல்லது போன் நெம்பர் தந்தால் உதவியாக இருக்கும்.

குறிச்சி டைம்ஸ் said...

தங்களது படைப்புகளை படித்தேன் மிகவும் அருமை...

சென்னையை தலைமையிடமாக கொண்டு மார்ச் மாதம் முதல் ஆன்மிக இதழ் ஒன்றினை கொண்டு வர எங்களது குழு முடிவு செய்துள்ளது...

அதற்கு தங்களது படைப்புகளை தந்து ஆன்மிக பணியில் ஈடுப்படுத்தி கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம்.

தங்கள் மெயில் அல்லது போன் நெம்பர் தந்தால் உதவியாக இருக்கும்.

Maayaa said...

jaisankar
badhil pottachu.. sorry romba naal aachu!!

kuRicci jega
romba nandri..aana aanmeega idhazla ezhuthum alavu vishayam theriyumnnu thonala..unga blogla vandhu contact seyya muyarchi pannen..anga access illa.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Iyarkaya said...

கடவுளை காணும் வழி

http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/219

http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/198

http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/886

http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/223

Unknown said...

அடுத்த பதிவு என்ன ஆச்சு

Maayaa said...

anaivarukkum nandri.. @kurinji jeka - ungal seythiyai ippozhuthan paartghen. ungal aanmeega idhazh veliyakinradha.. theriyapaduthavum..nandri