Friday, July 28, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் -9 சக்தியைப் பற்றி

இந்த வாரம் ஆடி மாதச் சிறப்பாக சக்தியைப் பற்றி தெரிந்து கொள்வோம்!!

1. சக்திக்கு துர்கா என்ற பெயர் எப்படி வந்தது? அதன் பொருள் என்ன?
2. காசி விசுவநாதர் இருக்கும் இடத்தில் சக்தியின் பெயர் என்ன?
3.தடாசதகைபிராட்டி என்ற பெயரை சக்தி எப்போது பெற்றாள்?
4. துர்க்கையை இராகு காலத்தில் வழிபடும் போது ஒவ்வொரு நாளில் எவ்வித மலர்களால் வழிபட வேண்டும்?
5. துர்க்கை தோன்றிய நாள் எது?
6. அர்ச்சகர்கள் பெண் வேடமணிந்து சக்தியை பூசை செய்யும் தலம் எது?
7. வெக்காளியம்மன் திருக்கோவில் எங்கு உள்ளது?
8. வக்கிரகாளியும் வரதராஜ பெருமாளூம் உறையும் இடம் எது?
9. மங்கள சண்டி - பெயர்க்காரணம் என்ன?
10. துர்க்கைக்கு எந்த எண்ணைகளில் தீபம் ஏற்றுவது நல்லது?

மக்களே!!
வெகு நாட்களுக்குப் பிறகு பதில்கள் பதிவு செய்வதற்கு மன்னிக்கவும்.

பதில்கள் இங்கே:

1. துர்கமன் என்ற அசுரனைக் கொன்றதால் துர்கா என்ற பெயர் பெற்றாள் சக்தி. துர்கை என்றால் தீயவற்றை அழிப்பவள் என்று பொருள்.
2. காசி விசாலாக்ஷி
3.மதுரையில் மீனாட்சி அவதாரத்தில் சிவபெருமான் சௌந்தரபாண்டியனாய் உருவெடுத்து வந்த போது!!
4. செவ்வாய்
5.விரைவில் பதிவு செய்யப்படும்...
6.திருவானைக்காவல்
7.உரையூர்
8.திருவக்கரை பெரும்பாக்கத்தின் தெற்கே 7 கி.மீ அல்லது திருகானூர் வடக்கே 5 கீ.மி தொலைவில் உள்ளது. விஷ்ணு வக்ராசுரனை வதம் செய்ததாலும், பார்வதி தேவி வக்ராசுரனுடைய சகோதரியான துன்முகியைக் கொன்று அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை குண்டலமாகக் கொண்டு வக்ரமாக இருந்ததால் வக்கிரகாளி என்ற பெயர் பெற்றாள்.
9. மங்கள சண்டீ- மங்கள் எனபது செவ்வாய் பகவானைக் குறிக்கும். அவர் வழிபட்டதால் மங்கள சண்டீ எனறு பெயர்.
10. வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, நல்லெண்ணை, தேங்காயெண்ணை.


தொடரும்..

Sunday, July 16, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள்- 8 பெருமாளைப் பற்றி

மக்களே... நீண்ட இடைவேளைக்குப் பிறகு..

பெருமாளைப் பற்றி சில கேள்விகள் :

1. கமலஷேத்திரம் என்பது எது? அதன் சிறப்பு என்ன?

2. விஷ்ணு சுயமாகக் குடிகொண்ட தலங்கள் எத்தனை? அவை யாவை?

3. அப்பக்குடத்தான் எனற பெயருடன் விஷ்ணு காட்சியளிக்கும் இடம் எது?

4. விஷ்ணு ஜோதி வடிவமாகக் காட்சியளித்தது எங்கே?

5. விஷ்ணு ப்ரலகாசூரனை வதம் செய்தது எங்கே?

இன்னொரு சுலபமான கேள்வி..choice (5/6) வேற இருக்கு பாருங்க?:)-

6 விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்கள் யாவை?

பதில்கள்

1. கமலக்ஷேத்திரம் என்பது திருக்கண்டியூரைக் குறிக்கும். ஹரசாபவிமோசனப் பெருமாள் - சிவனின் சாபத்தைப் (ப்ரம்மஹத்தி தோஷம்) போக்கிய தலம்.
கமலவல்லி நாச்சியார் உள்ள இத்தலத்தில் கமலாக்ருதி விமானம் (தாமரை அமைப்பு) உள்ளது. இது ஸ்ரீ ரங்கத்தைவிட பழமை வாய்ந்த திருப்பதி ஆகும்.

2.விஷ்ணு சுயமாகக் குடிகொண்ட தலங்கள் எட்டு. அவை
தலம் பெருமாள்
1. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாதர்
2. ஸ்ரீ முஷ்னம் பூவராகர்
3. திருப்பதி ஸ்ரீ நிவாசர்
4. நைமிசாரண்யம் ஸ்ரீ ஹரி
5. புஷ்கரம் பரமபுருஷன்
6. சாளிக்ராமம் ஸ்ரீ மூர்த்தி
7. பத்ரிகாஸ்ரமம் பத்ரிநாராயணன்
8. வானமாமலை தோதாத்ரிநாதர்


3. அப்பக்குடத்தான் என்ற பெயரில் கோவிலடி (திருவையாறு அருகே) என்ற ஊரில் உள்ளார்

4. விஷ்ணு ஜோதி வடிவமாகக் காட்சியளித்த இடம் காஞ்சிபுரம் ஆகும்.

5 விஷ்ணு ப்ரலகாசூரனை பரிக்கல் என்ற இடத்தில் வதம் செய்தார்.

5. பஞ்ச ஆயுதங்கள் - சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம், கட்கம்

தொடரும்...