Saturday, January 06, 2007

தெரிந்து கொள்வோமே - தலம் - 24 !!

இனிய வாசகர்களே!!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!!கேள்விப்பகுதிக்குச் செல்வோமா!!!

1. நவக்கிரஹங்கள் ஒரே திசையில் அமைந்திருக்கும் தலம் எது?

2. கஜுராஹோ கொவிலுக்கு இணையாக தமிழ்நாட்டில் ஒரு கோவில் உள்ளது. அது எது?

3. தமிழகத்தில் அதிக வருமானம் வரும் கோவிலும் மற்றும் திருமகள் அகனி காமதேனு சூரியன் நிலமகள் போன்றோர் வழிபட்ட கோவிலுமானது எது?

4. ஜுரம் நீங்க வழிபடப்படும் தலம் எது??

5. அம்பாள் நாகையில் எப்பெயருடன் காட்சி அளிக்கிறாள் ? மேலும் இக்கோவிலின் சிறப்புகள் என்னென்ன?


வெகுநாட்களுக்குப் பிறகு தொடங்குவதால், ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இம்முறை பதில்கள் உள்ள தளங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

1..http://www.shivatemples.com/sofct/sct123.html

2.http://siddhanta.shaivam.org/sp/spt_p_kadambur.htm

3.http://www.palanitemples.com/thiruavinankudi.htm

4.http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kondiccaram.htm

5.http://www.shivatemples.com/sofct/sct082.html

விடைகள்:

1. திருக்கோளிலி / திருக்குவளை. நவகிரகங்கள் அனைத்தும் தெற்கு பார்த்து உள்ளன.

2. கடம்பூர் கரக்கோவில். கோவிலின் அடிப்பாகம் ரத வடிவில் குதிரைகள் பூட்டியது போல் உள்ளது.

3. திருவாவினன்குடி முருகன்

4. திருக்கண்டீஸ்வரம்.சுரநோயால் வாடுபவர்கள் இம்மூர்த்திக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கலரிசி நிவேதனம் செய்தால் சுரம் நீங்குவது இன்றும் கண்கண்ட பிரார்த்தனையாக உள்ளது

5.நீலாயதாக்ஷி. இங்கு அனைத்து கிரகங்களும் சனி பகவானை மேற்குப் பார்த்தபடி இருப்பதும், சனி பகவான் தெற்குப் பார்த்தவாறு இருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

தொடரும்..