Monday, November 05, 2007

தெரிந்து கொள்வோமே!! - நாகம்

மக்களே
நாகம் அனைத்து கடவுள்களிடமும் இருக்கின்றன..யாரிடம் மற்றும் எவ்வடிவில் என்பதே கேள்வி!!
1. விநாயகரிடம் எவ்வடிவில் நாகம் உள்ளது?
2. முருகப்பெருமானிடம் ?
3. அம்பிகையிடம்?
4. சிவபெருமானிடம்?

5 ஆதிசேடன், கார்க்கோடகன், தட்சகன் ஆகிய நாகராஜாக்கள் பூஜித்த தலம் எது?

விடைகள்
1. உதரபந்தனம் என்ற அரைஞாண் கயிறாக
2. மயிற்கால் பந்தனம்
3. சிறுவிரல் மோதிரமாக
4. நாகாபரணம்
5.திருநாகேஸ்வரம்
தொடரும்

Sunday, October 07, 2007

தெரிந்து கொள்வோமே!!

மக்களே!!
மீண்டும் இத்தளத்தில் உங்களை சந்திக்க ஆவலுடன் வந்துள்ளேன். கேள்விப்பகுதிக்குச் செல்வோமா!!

1. கருவறையின் வேறுபெயர்கள் என்ன?
2. குருபூர்ணிமா எனப்படும் நாள் எது?
3. கேது தோஷ பரிகாரத்திற்கு உகந்த இடம் எது?
4. சௌந்தராண்யம் எனப்படும் ஊர் எது?
5. விஜயநகர மன்னர்கள் வழிபட்ட சக்தி தேவி யார்?

தொடரும்..
1கர்பகிரஹம், சந்திதானம், மூலஸ்தானம், உண்ணாழிகை
2.வியாச பூஜை நாள்
3.பிள்ளையார்பட்டி
4. நாகைப்பட்டிணம்
5. மாரியம்மன்
தொடரும்..

Friday, September 21, 2007

Makkale

My dear Makkale..

Sorry for leaving abruptly all these days!!

Okay.. I will come back on Oct 7th (after my exams) with a new post.

Thanks for coming by!!
See you soon !!
Priya

Monday, June 18, 2007

தெரிந்து கொள்வோமே!!

வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்..

1. தமிழக அரசின் சின்னத்தில் உள்ள கோவில் கோபுரம் எது
2. ராமபிரான் நவகிரஹங்களுக்கு சிலை பிரதிஷ்டை செய்த இடம் எது?
3.அட்சய திருதியை அன்று செய்யவேண்டிய காரியங்கள் என்னென்ன?
4.சொரிமுத்தையனார் ஆலயம் எங்கு உள்ளது ?
5.காசியில் கங்கை எந்த திசையை நோக்கி பாய்கிறது?

விடைகள்

1. ஸ்ரீ வில்லிபுத்தூர்
2. தேவிப்ப்ட்டினம் (ராமேஸ்வரம் அருகில்)
3. பெண் பார்த்தல், தொழில் தொடங்கல், வேலைக்கு விண்ணப்பித்தல், புதுப்பொருள், நகை வாங்ககுதல்.
4. காரையாறு (பொதிகை மலை அருகில்)
5. வடக்கு முகமாக..
தொடரும்..

Sunday, March 25, 2007

தெரிந்து கொள்வோமே !!! - வாஸ்து

வாஸ்து

1.வீட்டின் தென்கிழக்கு திசையில் இருக்கவேண்டியது எது?
2.வீட்டின் கிழக்கு திசையில் இருக்கவேண்டியது எது?
3.வீட்டின் தெற்கு திசையில் இருக்கவேண்டியது எது?
4.வீட்டின் மேற்கு திசையில் இருக்கவேண்டியது எது?
5.வீட்டின் வடக்கு திசையின் இருக்கவேண்டியது எது?
விடைகள்
1. தென்கிழக்கு - சமையல் அறை
2. கிழக்கு - படிக்கும் அறை, நுழை வாயில்
3. தெற்கு - படுக்கையறை
4. மேற்கு - குழந்தைகள் படுக்கையறை (second bed room)
5. வடக்கு - பண்ம் சேமிப்பு அறை

தொடரும்..

Thursday, March 01, 2007

தெரிந்து கொள்வோமே !!! - அபிஷேகம், விபூதி மற்றும் பூஜை

மக்களே! இப்பதிவில் பூஜை,அபிஷேகம் பற்றிய கேள்விகளைப் பார்ப்போம்.
1. இறைவனுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
2.இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
3.இறைவனுக்கு மாம்பழ அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
4.இறைவனுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
5.இறைவனுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
6.இறைவனுக்கு வெண்தாமரை பூவால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
7.இறைவனுக்கு அரளிப் பூவால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
8.இறைவனுக்கு மருக்கொழுந்து பூவால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
9. விபூதி எத்தனை வகைப்படும்? என்னென்ன?
10. ஸ்வார்த்த, பரார்த்த பூஜை எனபது என்ன?

பதிலகள்:
1. நீடிய வாழ்வு
2. ஆயுள் விருத்தி
3. சந்தான பாக்யம்
4. ஐஸ்வர்யம்/ இலட்சுமி கடாக்ஷம்
5. வாழ்வில் ஒளி/நன்மை ஏற்படும்
6. மனசஞ்சலம் தீரும்/ கல்வி கேள்வி பெருகும்
7. திருமணம் நடைபெரும்
8. சுகபோகம் தரும்/கல்வி செல்வம் பெருகும்
9. விபூதி 4 வகைப்படும்.
கற்பம் அநுகற்பம் உபகற்பம் அகற்பம்
கற்பம், அனுகற்பம், உபகற்பம், அகற்பம் என விபூதி நான்கு வகைப்படும். அவற்றுள், நோயில்லாததாயும், கன்றுடன் கூடியதாயுமுள்ள பசுவைப் பூசித்து, அந்தப் பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது ஆகாயத்திலிருக்கும் பொழுதே யெடுத் பிண்டமாகச் செய்து உலர்த்திப் பஞ்சப்பிரமமந்திரங்களால் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப் பெற்ற விபூதியு அக்கினிஹோத்திரத்திலுண்டான விபூதியுமாகிய இந்த இரண்டும் கற்பமெனப்படும்.
வனத்தில் உள்ள உலர்ந்த சாணத்தை யெடுத்துச் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப்பெற்ற விபூதி அனுகற்பமெனப்படும்.
வனத்திலுள்ள வீட்டிலாவது பசுக்கட்டுமிடத்திலாவது செங்கற்சூளையிலாவது உள்ள காட்டுத் தீ முதலியவற்றால் தகனஞ் செய்யப்பட்ட விபூதியையெடுத்து வஸ்திரத்தால் சுத்தி செய்து கோசலத்தால் பிண்டஞ்செய்து மீண்டும் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து மூலமந்திரத்தால் சுத்தி செய்யப்பெற்ற விபூதி உபகற்பமெனப்படும்.
மந்திரம் முதலியவையின்றிப் பிராமணராலாவது, பெண்கள் சூத்திரர் முதலியவர்களாலாவது, சுத்தமானவிடத்திலுள்ள கோமயத்தை எடுத்துச் சேகரிக்கப்படடதும், வேதாத்தியயனத்துடன் அக்கினி காரியஞ் செய்கிறவர்களுடைய வீட்டிலுள்ள அடுப்பு முதலியவற்றினின்று எடுக்கப்பட்டதும் அகற்பமெனப்படும். http://www.shaivam.org/tamil/sta_sivarcana_candrikai_u.htm

10. தனக்கென்று செய்யப்படும் பூஜை - ஸ்வார்த்த பூஜை

உலக நலனுக்காக செய்யப்படும் பூஜை - பரார்த்த பூஜை
தொடரும்

Monday, February 12, 2007

தெரிந்து கொள்வோமே!! - விசேஷமான ஊர்

1. வேணுபுரம் என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
2. புகலி என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
3. வெங்குரு என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
4. பிரமபுரம் என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
5. காழிசீராம விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது?

விடைகள்

அனைத்தும் சீர்காழியைத் தான் குறிக்கிறது.

1. இறைவன் மூங்கில் வடிவமாக வந்து இந்திரனுக்கு அருள் புரிந்தமையால் இப் பெயர் ஏற்பட்டது.
2. சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் புகலிடமாகச் சென்றதால் இப் பெயர் ஏற்பட்டது
3. குருத் தன்மை இழந்த வியாழன், குருத் தன்மைப் பெற பூஜித்ததால் இப் பெயர் ஏற்பட்டது
4. ப்ரம்மன் தனது படைப்பு தொழில் இடையூறின்றி நடைபெற இறைவனை வழிபட்டு வந்ததால் இப்பெயர் பெற்றது


தொடரும்..

Thursday, February 08, 2007

தெரிந்து கொள்வோமே - விசேஷமான நாள்

1.ஸ்ரீ ரங்கநாதர் - ஆண்டாள் திருமணம் என்று நடந்தது?
2.சுந்தரேஸ்வரர் - மீனாட்ஷி திருமணம் என்று நடந்தது?
3.ராமர்-சீதை திருமணம் என்று நடந்தது?
4.ஐயப்பன் அவதரித்த நாள் எது?
5.அர்ச்சுனன் பிறந்த நாள் எது?
6. மன்மதன் உயிர் பெற்ற நாள் எது?

பதில்
1-6 :
அனைத்து விசேஷங்களும் பங்குனி- உத்திரத்தில் தான் நடந்தது!!

தொடரும்..

Saturday, January 06, 2007

தெரிந்து கொள்வோமே - தலம் - 24 !!

இனிய வாசகர்களே!!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!!கேள்விப்பகுதிக்குச் செல்வோமா!!!

1. நவக்கிரஹங்கள் ஒரே திசையில் அமைந்திருக்கும் தலம் எது?

2. கஜுராஹோ கொவிலுக்கு இணையாக தமிழ்நாட்டில் ஒரு கோவில் உள்ளது. அது எது?

3. தமிழகத்தில் அதிக வருமானம் வரும் கோவிலும் மற்றும் திருமகள் அகனி காமதேனு சூரியன் நிலமகள் போன்றோர் வழிபட்ட கோவிலுமானது எது?

4. ஜுரம் நீங்க வழிபடப்படும் தலம் எது??

5. அம்பாள் நாகையில் எப்பெயருடன் காட்சி அளிக்கிறாள் ? மேலும் இக்கோவிலின் சிறப்புகள் என்னென்ன?


வெகுநாட்களுக்குப் பிறகு தொடங்குவதால், ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இம்முறை பதில்கள் உள்ள தளங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

1..http://www.shivatemples.com/sofct/sct123.html

2.http://siddhanta.shaivam.org/sp/spt_p_kadambur.htm

3.http://www.palanitemples.com/thiruavinankudi.htm

4.http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kondiccaram.htm

5.http://www.shivatemples.com/sofct/sct082.html

விடைகள்:

1. திருக்கோளிலி / திருக்குவளை. நவகிரகங்கள் அனைத்தும் தெற்கு பார்த்து உள்ளன.

2. கடம்பூர் கரக்கோவில். கோவிலின் அடிப்பாகம் ரத வடிவில் குதிரைகள் பூட்டியது போல் உள்ளது.

3. திருவாவினன்குடி முருகன்

4. திருக்கண்டீஸ்வரம்.சுரநோயால் வாடுபவர்கள் இம்மூர்த்திக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கலரிசி நிவேதனம் செய்தால் சுரம் நீங்குவது இன்றும் கண்கண்ட பிரார்த்தனையாக உள்ளது

5.நீலாயதாக்ஷி. இங்கு அனைத்து கிரகங்களும் சனி பகவானை மேற்குப் பார்த்தபடி இருப்பதும், சனி பகவான் தெற்குப் பார்த்தவாறு இருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

தொடரும்..