Monday, February 12, 2007

தெரிந்து கொள்வோமே!! - விசேஷமான ஊர்

1. வேணுபுரம் என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
2. புகலி என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
3. வெங்குரு என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
4. பிரமபுரம் என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
5. காழிசீராம விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது?

விடைகள்

அனைத்தும் சீர்காழியைத் தான் குறிக்கிறது.

1. இறைவன் மூங்கில் வடிவமாக வந்து இந்திரனுக்கு அருள் புரிந்தமையால் இப் பெயர் ஏற்பட்டது.
2. சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் புகலிடமாகச் சென்றதால் இப் பெயர் ஏற்பட்டது
3. குருத் தன்மை இழந்த வியாழன், குருத் தன்மைப் பெற பூஜித்ததால் இப் பெயர் ஏற்பட்டது
4. ப்ரம்மன் தனது படைப்பு தொழில் இடையூறின்றி நடைபெற இறைவனை வழிபட்டு வந்ததால் இப்பெயர் பெற்றது


தொடரும்..

4 comments:

நாகை சிவா said...

எங்க ஊருக்கு பக்கத்தில் தான் இருக்கு. எனக்கே இது நாள் வரை இது தெரியாது. நல்ல பதிவு. தொடர்ந்து இடவும்.

Maayaa said...

romba nandri!

Vassan said...

வணக்கம்.

மொத்தம் 12 பெயர்கள் உண்டு, சீர்காழிக்கு. நீங்கள் சொல்லியிருக்கிற ஊர்கள் தவிர 7 பெயர்கள் உள்ளன. ஞாபகமில்லை, சீர்காழி சொந்த ஊராய் இருந்தும் !!

நீங்கள் எல் பாஸோவில் (Utep) மாணவராய் இருப்பது கண்டு மகிழ்ச்சி. நாங்கள் எல் பாஸோவிற்கு வடக்கே 300+ மைலில் உள்ளோம் - அல்புகர்க்கியில்..

vassan.kollidam.com

Unknown said...

hi thanks for the details.
great
jaisankarj