Friday, September 22, 2006

தெரிந்து கொள்வோமே!! -17 நவராத்திரி

வாசகர்களே!! நவராத்திரி சம்பந்தப்பட்ட கேள்விகளை இங்கு பார்ப்போம்.மேலும், நவராத்தியின் ஒவ்வொரு நாளும் அன்றுள்ள சிறப்பைக் காண்போம்!!

மக்களே!! இம்முறை புரட்டாசி மாதத்தில் விஜயதசமி (10வது நாள்) அன்று திருவோண நட்சத்திரம் வருவதால் பெருமாளுக்கு மிக விசேஷம்..விரதம் இருக்கவிரும்பினால் இருக்கலாம். மாவிளக்கு ஏற்ற விரும்பினால் அதுவும் நல்லது..

கேள்விகளுக்கு விடைகள் நாளை பதிவி செய்ய உள்ளேன். நன்றி!!


முதல் நாள் தேவியின் பெயர் : மஹேஸ்வரி பாலா
அர்ச்சிக்கவேண்டிய மலர் : மல்லிகை
இலை : வில்வம்
ராகம் : தோடி

இரண்டாம் நாள் தேவியின் பெயர் : கவுமாரி குமாரி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : முல்லை
இலை : துளசி
ராகம் : கல்யாணி

மூன்றாம் நாள் தேவியின் பெயர் : வராஹி கன்யா கல்யாணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : சம்பங்கி
இலை : மருது
ராகம் : காம்போதி

நான்காம் நாள் தேவியின் பெயர் : மஹாலக்ஷ்மி ரோகிணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : ஜாதி
இலை : கதிர்ப்பச்சை
ராகம் : பைரவி

ஐந்தாம் நாள் தேவியின் பெயர் : வைஷ்ணவி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : பாரிஜாதம்
இலை : விபூதிப்பச்சை
ராகம் : பந்துவராளி

ஆறாம் நாள் தேவியின் பெயர் : இந்திராணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : செம்பருத்தி
இலை : சந்தன இலை
ராகம் : நீலாம்பரி

ஏழாம் நாள் தேவியின் பெயர் : மஹாசரஸ்வதி சுமங்கலி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : தாழம்பூ
இலை : தும்ப இலை
ராகம் : பிலஹரி

எட்டாம் நாள் தேவியின் பெயர் : நரசிம்ம தருணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : ரோஜா
இலை : பன்னீர் இலை
ராகம் : புன்னாகவராளி

ஒன்பதாம் நாள் தேவியின் பெயர்: சாமுண்டி மாதா
அர்ச்சிக்கவேண்டிய மலர் : தாமரை
இலை : மருக்கொழுந்து
ராகம் : வசந்தா

1.கொல்லூரின் ஆரம்ப மற்றும் இடைக்காலப் பெயர் என்ன?
2 இங்கு தவம் செய்த முனிவரின் பெயர் என்ன?
3. இங்கு தேவி மூகாம்பிகை ஏன் அப்பெயர் பெற்றாள்?
4. இத்தலத்திற்கு ஏன் சப்த அமிர்த தலம் என்ற பெயர்?
5. இக்கோவிலில் விக்ரகப் ப்ரதிஷ்டை செய்தது யார்?
6. இங்குள்ள விசேஷமான ப்ரசாதம் என்ன?
7. இங்குள்ள கணபதியின் உருவச் சிறப்பு என்ன?
8. சாரதா நவராத்திரி, மஹா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பவை எப்போது வரும்?
9. நவராத்தியில் பாட விசேஷமான நவாவக்ன கீர்த்தனையைப் பாடியவர் யார்?
10. விஜய தசமி என்று கொண்டாடுகிறோம்?

விடைகள்

1. மஹாரண்யபுரம்;கோலபுரம்
2. கோலமஹரிஷி
3. மூகாசுரன் என்ற அரக்கனை வதைதததால்
4.மூர்த்தி, தீர்த்தம்,தலம், ஆரண்யம், விமானம், மண்டபம்,நதி ஆகிய ஏழும் அமைந்த்தால்.
5.ஆதிசங்கரர்
6.மதியம் - புடி சாந்தி; இரவு- கஷாய தீர்த்தம்.
7.பஞ்சமுக கணபதி
8. சாரதா நவராத்திரி - புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
மஹா நவராத்திரி- தை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
வசந்த நவராத்திரி - பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
9. முத்துசுவாமி தீட்சிதர்
10.புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் தசமி

தொடரும்

11 comments:

MKVANMADHI said...

ப்ரியா, ரொம்ப அற்புதமாக ஆன்மிக வி­யங்கçe க்விஸ் வடிவில் கொடுத்திருக்கீங்க...அருமையான முயற்சி. பாராட்டுக்கள். வலைப்பூமூலம் எவ்வeவு செய்திகçe மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்க முடிகிறது பாருங்கள். தொடர்ந்து உங்கeது வலைப்பூவைப் பார்ப்பேன். நீங்களும் ஒரு தடவை என் வலைப்பூவிற்கு வாருங்கள். உங்கள் கருத்துக்கçe எனக்குத் தாருங்கள். நன்றி

visit: www.vanmadhi.blogspot.com

தி. ரா. ச.(T.R.C.) said...

9)Muthuswamy dikshithar

Maayaa said...

thank you vanmadhi!! I will definitely visit ur website..ur visit really motivates me.. thanks again!!

t.r.c
awesome!! thats a good start!!!

The Doodler said...

4. Adi Sankarar?

Maayaa said...

yeh.. right subha!!!

om tat sat said...

1.Maharanyapura and Kolapura

2.Sage kola

3.Devi cursed the demon kamasuran
to be become dumb (mooka) at the time of demon getting his evil wishes full-filled by lord. Finally devi Slayed him due to his
devilish nature and because of
this event devi got the name
"mookambika" (mooka + Ambika).

6.Kashayam at nightime

7.Panchamuka Ganapathi

8.Saradha Navarathri - October
Vasantha Navarathri - April

10.vijaya dasami - celebrated
at 10th lunar day of the
navarathri

Om

om tat sat said...

5.Brahma, Maha Saraswathi, Vishnu,
Maha Lakshmi, Maheshwara, Maha
Kali are all manifested in one
Lingam and the presence of
Mookambika in the temple gave
the name Saptha Mahakshetra.

Om.

Maayaa said...

no..its wrong om tat sat

Maayaa said...

om tat sat,
i meant that ur 5th answer is alone wrong

தி. ரா. ச.(T.R.C.) said...

மகிஷாசுரனை துர்காதேவி வெற்றிக்கொண்ட நாளன 10 வது நாள் நவரத்திரியில்.

Anonymous said...

நவராத்திரி குறித்த கேள்வி பதிலும் கட்டுரையும் சிறப்பாய் இருந்தது. வாழ்ட்துக்கள்