Monday, June 26, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள்- 7

மக்களே!!

அடுத்த கேள்விக்கட்டு!!

1. நவராத்தி வழிபாட்டை கிருத யுகத்தில் அறிந்தவர் யார்? யார் அவருக்கு அதைச் சொன்னார்?

2. நெய்யில் உறைந்திருப்பவர் யார்?

3. திருவெள்ளறை - இத்தலம் எங்கு உள்ளது? என்ன ஆலயம் இங்கு உள்ளது?
யார் அதனை நிர்மாணித்தார்?

4. இந்திரனுக்கு அகலிகையால் ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் எது?

5. புரந்தரன் என்பது யாரைக் குறிக்கும்?


பதில்கள்

1. சுகேதன் என்ற அரசனுக்கு ஆங்கீரஸர் முனிவர் கூறியது.

2.சூரிய பகவான்

3. பங்கஜவல்லி சமேத புண்டரீகாஷப் பெருமாள் கோவில் உள்ள திருவெள்ளரை திருச்சி மாவட்டத்தில் உள்ளது.

4. திருக்கண்ணனார் கோவில்

5. இந்திரன்

தொடரும்..

Saturday, June 24, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள்- 6

இந்த வார கேள்விகள் என்னவென ஆவலுடன் பார்க்க வந்த வாசகர்களே!!
உங்களுக்கு என் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் தான் நான் ஆன்மீகம் பற்றி வாடிக்கையாகப் படிக்கும் பழக்கத்தை பழகிக் கொண்டேன். இல்லையெனில் நேரமில்லை எனறு எனக்கே நான் ஒரு சாக்கு கூறிக்கொண்டிருப்ப்பேன். இந்தப் பகுதியை இன்னும் சுவாரஸ்சியமாக்க உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
சரி, இந்த வாரக் கேள்விகளைப் பார்ப்போம்.

1. சிவகாமசுந்தரி - எனக்கு மிகவும் பிடித்த பெயர்..கூப்பிடும் போதே அவ்வள்வு நளினம்!!!. சரி! இந்த பெயரில் சக்தி காட்சி தரும் இடம் எது?
2. எமதர்மன் கோவில் எஙகு உள்ளது?
3. அன்பில் - கோவில் மூலவர் யார்/
4. ராகு காலத்தில் யாரை வழிபட வேண்டும்?
5. பசும்பாலில் வசிப்பவர் யார்?

ஐந்து கேள்விகளில் நான்கிற்கு திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்கப்பட்டமையால் விடைகளை விரைவில் பதிவு செய்கிறேன். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி!!

1. சிதம்பரம்
2. ஸ்ரீ வாஞ்சியம்
3. வடிவழகிய நம்பி
4. துர்கை
5. சந்திரன்
தொடரும்..

Monday, June 19, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் - 5

வாசகர்களே!!
என்ன... அடுத்த கேள்விப் பதிவை படித்து பதில் சொல்ல தயாரா??

கேள்விகள் இங்கே!!

1. முதலாழ்வார் மூவரில் இரண்டாவது ஆழ்வார் யார்?

2. ருத்திராட்சத்தில் எத்தனை முகங்கள் உண்டு? கை மணிக்கட்டில் மற்றும் மார்பில் எத்தனை ருத்திரட்சம் தரிக்கலாம் என்று சாத்திரம் சொல்கிறது?

3. எந்த இரண்டு நதிகள் தேவப்ப்ரயாக் என்ற ஊரில் சேர்ந்து கங்கையாக வருகிற்து?

4. விஷ்ணுவின் செவி துவாரங்களிலிருந்து தோன்றிய அசுரர்கள் யார்?

5. நவராத்தியின் போது சகதி வதைத்த மூன்று அசுரர்கள் யார்?

பதில்கள் :

1. பூதத்தாழ்வார்
2. ஒன்று முதல் பதினாலு வரை. கை மணிக்கட்டில்- 12. மார்பில்- 108.
3. அலக்நந்தா, பாகீரதி
4. மது, கைடபர்
5. சும்பன், நிசும்பன், மஹிஷாசுரன்

தொடரும்..

Tuesday, June 13, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் -4

வாசகர்களே !!

திருவிளையாடல் தருமியைப் பார்த்து சொல்ற மாதிரி " கேள்விகளை நீ கேட்கிறாயா.. இல்லை நான் கேட்கட்டுமா??"ன்னு நீங்க என்னிடம் சொல்றதுக்கு முன்னே இதோ அடுத்த கேள்விக்கட்டு....

1. யாகங்களில் சிறந்தது எது?
2. விரதங்களில் சிறந்தது எது என்று கருதப்படுகிறது?
3. கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் உள்ள சக்தியுள்ள கோவில் எது?
4. துன்பங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
5. முருகப் பெருமானைப் ப்ற்றி கூறும் ஆகமம் எது?

பதில்கள்:
1. அஸ்வமேத யாகம்

2.ஏகாதசி விரதம் (வைணவம்) ; சோமவார விரதம் (சைவம்)

3. வைஷ்ணவி ஆலயம் என்று படித்தேன். 'கூகிலில்' தேடினால் அப்படியொரு கோவிலைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் அதே ஊரில் துர்கை ஆலயம் சக்தி வாய்ந்த ஒன்று எனக் கண்டறிந்தேன். அவை இரண்டும் ஒன்றாக இருக்கக் கூடும் என நம்புகிறேன்.

4. துன்பங்கள் மூன்று வகைப்படும். அவை

1.ஆதியாத்மிகம் : நமது செயலால் நாமே எற்படுத்திக் கொள்ளும் துன்பங்கள்.
2.ஆதிதைவிகம் : முன்வினையால் எற்படும் துன்பங்கள்.
3.ஆதிபௌதிகம் : இயற்கை காரணமாக நம்மையும் மீறி வரும் துன்பங்கள்.

5. முருகப் பெருமானைப் பற்றி கூறுவது காமிகம் என்ற ஆகமம் ஆகும். அதனை தமிழில் 'குமார தந்த்ரம்' என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார் விஸ்வநாத சிவாசாரியார் அவர்கள்.

தொடரும்..

Monday, June 05, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் - 2 குபேரன் பற்றி

என்ன மக்களே!! குபேரனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா??

1. குபேரன் தோன்றிய நாள், நட்சத்திரம் எது?
2. குபேரனுக்கு உகந்த நைவேத்தியம் எது?
3. குபேர விக்ரஹம் உள்ள் புகழ் பெற்ற இடம் எது?
4. திருமங்கலத்தின் சிறப்பு என்ன?
5. குபேரனுக்கு தனிக்கோவில் உள்ளதா?


பதில்கள்

1. குபேரன் தோன்றிய நாள் - வியாழக்கிழமை, நட்சத்திரம் - பூசம்.
2. குபேரனுக்கு உகந்த நைவேத்தியம் : ஏலக்காய், கிராம்பு போனற வாசனை திரவியங்கள் கலந்த பால்.
வெல்லம்/சர்க்கரை போன்றவையும் லக்ஷ்மி குபேர பூஜையில் வைக்கப்படுவதாக so-hum பின்னூட்டப் பகுதியில் சொல்கிறார்.
3. நாசிக் (இந்தியாவில் பணம் அச்சடிக்கும் இடம்).

4. தமிழகத்தில் திருமங்கலத்தில் (மதுரை) தான் முனீஸ்வரர் கோவிலில் குபேர விக்ரஹம் தனியாக உள்ளது.

5. குபேரனுக்காக பொதுவாக தனிக்கோவில் கிடையாது. சிவன் கோவில்களில் அவருடைய சிலையைக் காணலாம். ரத்னமங்கலத்தில் (க்ரசண்ட் கல்லூரி அருகில்) புதிதாக இப்போது குபேரர் கொவில் வந்துள்ளதாம். மேலும் விபரங்களுக்கு பின்னூட்டப் பகுதியைப் பார்க்கவும்.

தொடரும்..