Monday, February 12, 2007

தெரிந்து கொள்வோமே!! - விசேஷமான ஊர்

1. வேணுபுரம் என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
2. புகலி என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
3. வெங்குரு என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
4. பிரமபுரம் என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
5. காழிசீராம விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது?

விடைகள்

அனைத்தும் சீர்காழியைத் தான் குறிக்கிறது.

1. இறைவன் மூங்கில் வடிவமாக வந்து இந்திரனுக்கு அருள் புரிந்தமையால் இப் பெயர் ஏற்பட்டது.
2. சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் புகலிடமாகச் சென்றதால் இப் பெயர் ஏற்பட்டது
3. குருத் தன்மை இழந்த வியாழன், குருத் தன்மைப் பெற பூஜித்ததால் இப் பெயர் ஏற்பட்டது
4. ப்ரம்மன் தனது படைப்பு தொழில் இடையூறின்றி நடைபெற இறைவனை வழிபட்டு வந்ததால் இப்பெயர் பெற்றது


தொடரும்..

Thursday, February 08, 2007

தெரிந்து கொள்வோமே - விசேஷமான நாள்

1.ஸ்ரீ ரங்கநாதர் - ஆண்டாள் திருமணம் என்று நடந்தது?
2.சுந்தரேஸ்வரர் - மீனாட்ஷி திருமணம் என்று நடந்தது?
3.ராமர்-சீதை திருமணம் என்று நடந்தது?
4.ஐயப்பன் அவதரித்த நாள் எது?
5.அர்ச்சுனன் பிறந்த நாள் எது?
6. மன்மதன் உயிர் பெற்ற நாள் எது?

பதில்
1-6 :
அனைத்து விசேஷங்களும் பங்குனி- உத்திரத்தில் தான் நடந்தது!!

தொடரும்..