Friday, September 22, 2006

தெரிந்து கொள்வோமே!! -17 நவராத்திரி

வாசகர்களே!! நவராத்திரி சம்பந்தப்பட்ட கேள்விகளை இங்கு பார்ப்போம்.மேலும், நவராத்தியின் ஒவ்வொரு நாளும் அன்றுள்ள சிறப்பைக் காண்போம்!!

மக்களே!! இம்முறை புரட்டாசி மாதத்தில் விஜயதசமி (10வது நாள்) அன்று திருவோண நட்சத்திரம் வருவதால் பெருமாளுக்கு மிக விசேஷம்..விரதம் இருக்கவிரும்பினால் இருக்கலாம். மாவிளக்கு ஏற்ற விரும்பினால் அதுவும் நல்லது..

கேள்விகளுக்கு விடைகள் நாளை பதிவி செய்ய உள்ளேன். நன்றி!!


முதல் நாள் தேவியின் பெயர் : மஹேஸ்வரி பாலா
அர்ச்சிக்கவேண்டிய மலர் : மல்லிகை
இலை : வில்வம்
ராகம் : தோடி

இரண்டாம் நாள் தேவியின் பெயர் : கவுமாரி குமாரி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : முல்லை
இலை : துளசி
ராகம் : கல்யாணி

மூன்றாம் நாள் தேவியின் பெயர் : வராஹி கன்யா கல்யாணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : சம்பங்கி
இலை : மருது
ராகம் : காம்போதி

நான்காம் நாள் தேவியின் பெயர் : மஹாலக்ஷ்மி ரோகிணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : ஜாதி
இலை : கதிர்ப்பச்சை
ராகம் : பைரவி

ஐந்தாம் நாள் தேவியின் பெயர் : வைஷ்ணவி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : பாரிஜாதம்
இலை : விபூதிப்பச்சை
ராகம் : பந்துவராளி

ஆறாம் நாள் தேவியின் பெயர் : இந்திராணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : செம்பருத்தி
இலை : சந்தன இலை
ராகம் : நீலாம்பரி

ஏழாம் நாள் தேவியின் பெயர் : மஹாசரஸ்வதி சுமங்கலி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : தாழம்பூ
இலை : தும்ப இலை
ராகம் : பிலஹரி

எட்டாம் நாள் தேவியின் பெயர் : நரசிம்ம தருணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : ரோஜா
இலை : பன்னீர் இலை
ராகம் : புன்னாகவராளி

ஒன்பதாம் நாள் தேவியின் பெயர்: சாமுண்டி மாதா
அர்ச்சிக்கவேண்டிய மலர் : தாமரை
இலை : மருக்கொழுந்து
ராகம் : வசந்தா

1.கொல்லூரின் ஆரம்ப மற்றும் இடைக்காலப் பெயர் என்ன?
2 இங்கு தவம் செய்த முனிவரின் பெயர் என்ன?
3. இங்கு தேவி மூகாம்பிகை ஏன் அப்பெயர் பெற்றாள்?
4. இத்தலத்திற்கு ஏன் சப்த அமிர்த தலம் என்ற பெயர்?
5. இக்கோவிலில் விக்ரகப் ப்ரதிஷ்டை செய்தது யார்?
6. இங்குள்ள விசேஷமான ப்ரசாதம் என்ன?
7. இங்குள்ள கணபதியின் உருவச் சிறப்பு என்ன?
8. சாரதா நவராத்திரி, மஹா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பவை எப்போது வரும்?
9. நவராத்தியில் பாட விசேஷமான நவாவக்ன கீர்த்தனையைப் பாடியவர் யார்?
10. விஜய தசமி என்று கொண்டாடுகிறோம்?

விடைகள்

1. மஹாரண்யபுரம்;கோலபுரம்
2. கோலமஹரிஷி
3. மூகாசுரன் என்ற அரக்கனை வதைதததால்
4.மூர்த்தி, தீர்த்தம்,தலம், ஆரண்யம், விமானம், மண்டபம்,நதி ஆகிய ஏழும் அமைந்த்தால்.
5.ஆதிசங்கரர்
6.மதியம் - புடி சாந்தி; இரவு- கஷாய தீர்த்தம்.
7.பஞ்சமுக கணபதி
8. சாரதா நவராத்திரி - புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
மஹா நவராத்திரி- தை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
வசந்த நவராத்திரி - பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
9. முத்துசுவாமி தீட்சிதர்
10.புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் தசமி

தொடரும்

Tuesday, September 19, 2006

தெரிந்து கொள்வோமே -16 அழகு!!

வாசர்களே!! இம்முறை அழகு என்பதை அடிப்படையாகக் கொண்ட சில கேள்விகள் இங்கே!!
1. திருவாரூரில் எது அழகு?
2. திருவிடைமருதூரில் எது அழகு?
3. மன்னார்குடியில் எது அழகு?
4. தஞ்சாவூரின் பழைய பெயர் என்ன?
5.முருகு என்பதன் பொருள் என்ன?
6.மன்மதனின் அம்புகளின் பெயர் என்ன?
7.பெண்டிற்கு அழகு என்ன என்று ஒளவையார் கூறியுள்ளார்? எதில்?
8. அழகின் சிரிப்பு- இதை எழுதியவர் யார்?
9. அழகு அலைகள் என்று பொருள் படும் ஆதிசங்கரரின் படைப்பு எது?
10.அழகர் என்பது யாரைக் குறிக்கும்?அழகர் கோவில் உற்சவர் பெயர் என்ன?
விடைகள்:
1.திருவாரூரில் தேர்
2. திருவிடைமருதூரில் தெரு
3. மன்னார்குடியில் மதில்
4. த்ஞ்சாவூர் - அழகாபுரி
5.அழகு
6. 5 மலர் அம்புகள் - தாமரை அம்பு, மாம்பூ அம்பு, அசோக மலர் அம்பு,முல்லை அம்பு, நீலோற்பல அம்பு
7. உண்டி சுருங்குதல். கொன்றை வேந்தன்.
8. பாரதிதாசன்
9.சௌந்தர்ய லஹரி
10. திருமால். சுந்தரராஜப் பெருமாள்.

மக்களே!! விநாயகர் பற்றிய இக்கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்று இன்று கண்டேன். பதில் இங்கே!

விநாயகர் யாரை சம்ஹாரம் செய்து மூஞ்சூரை வாகனமாகக் கொண்டார் எங்கு? கஜமுகாசுரன் - திருச்செங்காட்டங்குடி

தொடரும்

Thursday, September 14, 2006

தெரிந்து கொள்வோமே !!! -15

1.சுவாஹா என்பவள் யார்?
2.சூரியனின் ரதத்தை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளின் பெயர்கள் என்ன?
3.குருபகவானின் சிற்ப்பு என்ன?
4.ராகு பகவானுக்கு உகந்த நாள் எது?
5.சனிபகவானின் அதிதேவதை யார்?
6.ஆதி புரி என்று அழைக்கப்படும் நகரம் எது?
7.புதன் பகவானை வழிபட்டால் என்ன நனமை உண்டாகும்?
8.வியாழனின் வாகனம் என்ன?
9.குருபகவான் கோவில் கொண்டுள்ள ஊர் எது?
10.சூரியனின் பெருமையை உரைக்கும் நூல் எது?

விடைகள்:
1. சுவாஹா அக்னியின் மனைவி.
2.7 குதிரைகள் - காயத்ரி, ப்ருஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி.
3.குருபகவான் தீமை செய்பவரை தன் பார்வையால் நிறுத்தி விடுவார்.
4. ஞாயிறு
5. யமன்
6.திருநள்ளாறு
7.கல்வி ஜோதிடம் கணிதம் மருத்துவம்- இவற்றைப் பெருக்குவார்.
8.யானை
9. ஆலங்குடி
10. ஆதித்யஹ்ருதயம்
தொடரும்..

Thursday, September 07, 2006

தெரிந்து கொள்வோமே - விநாயரைப் பற்றி - 2

1.விநாயகர் யாரை சம்ஹாரம் செய்து மூஞ்சூரை வாகனமாகக் கொண்டார்? எங்கு?
2.ஒளவையாருக்கு மூப்பு அளித்தது யார்?அவரை ஒளவையார் எந்த ஊரில வணங்கி வந்தார்?
3.சிதம்பரத்தில் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள விநாயகரின் பெயர்கள் என்னென்ன?
4.விநாயகரை மருத, அகத்தி, இலந்தை மற்றும் துளசி இலையால் அர்ச்சித்தால் என்ன பலன் கிடைக்கும்?
5.சிந்தாமணி கணபதி - பெயர்க்காரணம் தருக
6.சஷ்டி கணபதி - பெயர்க்காரணம் தருக
7.மியான்மார் நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
8.மங்கோலியா நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
9.கம்போடியா நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
10.சீனா நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
11.ஜப்பான் நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
12. பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகரின் பெயர் என்ன?
விடைகள்:
1. கஜமுகாசுரன்.
2.விநாயகர். ஒளவையார் அவரை தினமும் திருக்கோவலூரில் வழிபட்டு வந்தார்.
3.சிதம்பரம்- கற்பக விநாயகர்.
பாண்டிசேரி- மணக்குள விநாயகர்
4. மருத இலையால் அர்ச்சித்தால் மகப்பேரு எற்படும்
அகத்தி இலையால் அர்ச்சித்தால் துயரம் விலகும்
இலந்தை இலையால் அர்ச்சித்தால் கல்வி மேம்படும்.
துளசி இலையால் அர்ச்சித்தால் நல்வாழ்வு ஏற்படும். ஆனால் அவருக்கு துளசி இலை ஆகாது என்றும் சொல்வார்கள். ஏனென்று விளக்கம் அறிந்தால் சொல்லவும்
5. கபில முனிவருக்கு சிந்தாமணியை திரும்பப் பெற உதவியதால் (விளக்கங்களுக்கு பின்னூட்டப் பகுதியைப் பார்க்கவும் ) இப்பெயர்.
6. கந்த சஷ்டியில் முருகனுக்கு உறுதுணையாய் இருந்ததால் இப்பெயர்.
7. மியான்மாரில் - மஹாபீனி
8.மங்கோலியா - தோத்கார்
9. கம்போடியாவில் - பிராகனேஸ்
10. டூ ஆன்ஷி டியின்
11.வினாயஷா (also, Kangi-ten or Daishô Kangi-ten (god of joy and harmony), or again Shôten-sama or Tenson-sama as said by Om Tat Sat in the comment section)
12.தேசிக விநாயகர் - பிள்ளையார்ப்பட்டியில்.


தொடரும்..

Friday, September 01, 2006

விநாயகரைப் பற்றி அறிவோமா??

மக்களே!! என்ன??!!! விநாயகர் சதுர்த்தியை நல்லா கொண்டாடினீங்களா?? சரி நம்ம விநாயகர பற்றி சில கேள்விகளைப் பார்ப்போமா!!

1. விஷ்வக்சேனர் வழிபாடு என்பது யாரைக் குறிக்கும்?
2. விநாயகர் வழிபாட்டுக்கு உகந்த நாள் எது?
3. துர்வாயுக்மம் என்பது எது?
4. விநாயகருக்கு அருகம்புல் போல் அர்ச்சிக்க உதவும் இன்னொறு இலை எது?
5. வாதாபி கணபதிம் பஜே - என்ற பாடலை இயற்றியவர் யார்?
6. விநாயகரைத் துதித்து ஆதிசங்கரர் எழுதிய பாடல் எது?
7. விநாயகர் திருப்பரங்குன்றத்தில் எவ்வாறு காட்சியளிக்கிறார்?
8. திருவாரூரில் அமைந்த விநாயகரின் பெயர் என்ன?
9. திருவெண்ணை நல்லூரில் அமைந்த விநாயகரின் பெயர் என்ன?
10.காஞ்சிபுரத்தில் அமைந்த விநாயகரின் பெயர் என்ன?

விடைகள்
1.விநாயகர்.
2.வெள்ளிக்கிழமை (பொதுவாக). சங்கடஹர சதுர்த்தி எனறும் சொல்லலாம் (மேலும் சதுர்த்தியில் வழிபடுவதால் வரும் நன்மைகளைப் பற்றி அறிய பின்னூட்டப் பகுதியில் ஓம் தத் சத் மற்றும் காரியின் உரையாடலைப் பார்க்கவும்).
3.அருகம்புல்
4.வன்னி இலை
5.முத்துசுவாமி தீக்ஷிதர்
6.கணேச பஞ்ச ரத்தினம்
7.கைகளில் கரும்போடு காட்சி அளிக்கிறார். இன்னொரு கையில் தந்தத்தை பிடித்துக் கொண்டும்
தாமரை மேல் அமர்ந்தும் காட்சி அளிக்கிறார்.
8.திருவாரூரில் - வாதாபி விநாயகர் (மாற்றுரைத்த விநாயகரும் இங்கே உள்ளார். ஆனால் அவரைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லவும்.)
9.திருவெண்ணை நல்லூரில்- பொல்லாப் பிள்ளையார்
10. காஞ்சியில் - விகடச்சக்கர விநாயகர்.

தொடரும்..