Wednesday, January 20, 2010

தெரிந்து கொள்வோமே - பெண் புலவர்கள்

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!
கேள்விப்பகுதிக்குச் செல்வோமா!!
1 ஔவையார் எழுதிய நூல்கள்  என்னென்ன?
2 காரைக்கால் அம்மையார் எழுதிய நூல்கள் என்னென்ன?
3 ஆண்டாள் பாடி எழுதிய நூல்கள் என்னென்ன?
4 ஹிந்து சமய வழிபாட்டில் ஈடுபட்ட வேறு சில பெண்களின் பெயர்கள் என்னென்ன?
5  அப்பெண்களின் படைப்புகள் என்னென்ன?


விடைகள்
1 ஆத்திச்சூடி , கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விநாயகர்  அகவல்  - வையார் என்ற பேரில் பலர்  பல்வேறு காலங்களில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. ஒளவையார்களின் பாடல்கள் அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களிலும் உள்ளன.
2 அற்புதத் திருவந்தாதி, திருவிரைட்டை மணிமாலை
3 திருப்பாவை, நாச்சியார் திருமொழி
4 காக்கைபாடினியார், பசலையார், பொன்முடியார்,பேயனார், இளவெயினி மற்றும்  பலர்.
5 பொன்முடியார்: சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி. இவரது கடமைப்பாட்டு என்ற தனிப்பாட்டுக்காக அறியப்படுகிறார்.
இளவெயினி: பரணர் காலத்தைச் சேர்ந்த பெண் புலவர் இவர். குறவர் சமுதாயத்தில் பிறந்த இவர் போர்க்களத்தில் பிணந்திண்ணும் பேய் மகளிரை வியந்து பாடிய சிறப்பால் “பேய்மகள்” என்கிற சிறப்புப் பெயருடன் பேய்மகள் இளவெயினி என்று அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய பாடல் ஒன்று (பாடல்:11) மட்டும் புறநானூற்றில் காணப்படுகிறது. பிற பாடல்கள் கிடைக்கவில்லை.
தொடரும்


Monday, August 17, 2009

தெரிந்து கொள்வோமே!! - கோவில்

1. ராஜாதிராஜ விண்ணகரம் என்பது எக்கோவிலைக் குறிக்கும்?
2. செண்பகாரண்யம் எக்கோவிலைச் சுற்றி உள்ளது?
3. தட்சிண துவாரகை என்பது எந்தக் கோவிலைக் குறிக்கும்? (மூன்றும் ஒரே கோவில் தான்)
3. இந்தக் கோவிலின் மூலவரின் பெயர் என்ன?
4. இந்தக் கோவிலைக் கட்டியது யார்? புதுப்பித்தது யார்?

பதில்கள்
1. 2. 3. மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில்
4. பரவாசுதேவர் (ஜகதோதாரணா எனத்தொடங்கும் பாடலில் கூட வரும் " பரம புருஷனா, பரவாசுதேவனா)
5. கட்டியது இராஜ ராஜ சோழன் (1018-1054 AD). புதுபித்தது குலொத்துங்க சோழன் (1074 - 1125 AD) மற்றும் விஜயராகவ நாயக் (1634-1675 A.D.)

நந்திபுர விண்ணகரம் என்ற தலம் தக்ஷிண ஜகன்நாதம் என்று அழைக்கப்படும். மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் தக்ஷிண த்வாரகை என்று அழைக்கப்படும்.

Source:http://archives.chennaionline.com/toursntravel/placesofworship/mannargudi.asp
http://kanavoo.com/temples/ChozhaTirupathigal.php
தொடரும்..

Tuesday, August 11, 2009

தெரிந்து கொள்வோமே!! - ஒரே இடம்

1. பராசக்தி மயில் உரு எடுத்து ஈசனை வணங்கிய இடம் எது?
2. கந்தன் சக்திவேல் பெற்ற தலம் எது?
3.திருஞான சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்துத் தந்த தலம் எது?
இன்னும் சந்தேகமா...
4. சென்னையில் கபாலீஸ்வரர் கோவில் எங்கு உள்ளது?

சரிங்க இதுக்கு பதில் தெரிந்தால் போதும்..அதுவே தான்
5. மந்தைவெளிக்கும் திருவல்லிக்கேணிக்கும் இடையில் உள்ள ஊர் எது?

விடை:

திருமயிலை

தொடரும்

Tuesday, August 04, 2009

தெரிந்து கொள்வோமே!! - சிதம்பர சபை

1. சிதம்பரம் - இதற்கு என்ன பொருள் கொள்ளலாம் ?!
2. சித் சபையில் இருப்பது யார்?
3. கனக சபையில் நடப்பது என்ன?
4. தேவ சபை என்பது என்ன?
5. நிருத சபை என்பது என்ன?
6. ராஜ சபை என்பது என்ன?

விடைகள்
1. சித் + அம்பரம் - சித் - அறிவு அம்பரம் - வெட்ட வெளி
ஞான ஆகாசம் என்பது பொருள்
2.நடராஜர் இருக்கும் இடம் சித் சபை
3.ஆராதனை மற்றும் அபிஷேகங்கள் கனக சபை
4.தீட்சதர்கள் கூடும் சபை தேவ சபை
5.நடன உருவங்கள் கொண்ட சபை நிருத சபை
6.ஆயிரங்கால் மண்டபம் கொண்ட சபை ராஜ சபை

தொடரும்..

Friday, August 15, 2008

தெரிந்து கொள்வோமே- முக்தி

1. ஸாலோக்யம் என்றால் என்ன?
2. ஸாரூப்யம் என்றால் என்ன?
3. ஸாந்நித்யம் என்றால் என்ன?
4. ஸாயுஜ்யம் என்றால் என்ன?
5. இவை நான்கும் எதனுடைய வகைகள்?

விடைகள்
1. இறைவனைக் காணுதல்
2.இறையருள் பெருதல்
3. இறைவன் அருகில் இருத்தல்
4. இறைத்தன்மை பெருதல்
5. இவை நாங்கும் முக்தியின் வகைகள்

தொடரும்..

Thursday, July 31, 2008

தெரிந்து கொள்வோமே!! திருப்பதி

1. திருப்பதி க்ருத யுகத்தில் எப்படி அழைக்கப்பட்டது?
2. திருப்பதி த்ரேதா யுகத்தில் எப்படி அழைக்கப்பட்டது?
3. திருப்பதி த்வாபர யுகத்தில் எப்படி அழைக்கப்பட்டது?
4. திருப்பதியைச் சுற்றி எத்தனை தீர்த்தங்கள் உள்ளன?
5. திருப்பதிப் பெருமாளின் பெயர் என்ன?

விடைகள்
1.கருடாத்ரி
2.வ்ருஷபாத்ரி
3.அரூசனாத்ரி
4.364
5.ஸ்ரீனிவாசர்

Monday, November 05, 2007

தெரிந்து கொள்வோமே!! - நாகம்

மக்களே
நாகம் அனைத்து கடவுள்களிடமும் இருக்கின்றன..யாரிடம் மற்றும் எவ்வடிவில் என்பதே கேள்வி!!
1. விநாயகரிடம் எவ்வடிவில் நாகம் உள்ளது?
2. முருகப்பெருமானிடம் ?
3. அம்பிகையிடம்?
4. சிவபெருமானிடம்?

5 ஆதிசேடன், கார்க்கோடகன், தட்சகன் ஆகிய நாகராஜாக்கள் பூஜித்த தலம் எது?

விடைகள்
1. உதரபந்தனம் என்ற அரைஞாண் கயிறாக
2. மயிற்கால் பந்தனம்
3. சிறுவிரல் மோதிரமாக
4. நாகாபரணம்
5.திருநாகேஸ்வரம்
தொடரும்