Tuesday, August 29, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதிலகள்-12

மக்களே!!
அடுத்த கேள்விக்கட்டு இங்கே!!

1.ருது எனறால் என்ன?
2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்?
3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன?
4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்?
5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு?
6 காஞ்சி எனபதன் பொருள் என்ன?
7. பிறக்க முக்தி தரும் இடம் எது?
8. இறக்க முக்தி தரும் இடம் எது?
9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது?
10. நினைக்க முக்தி தரும் இடம் எது?

விடைகள் :

1.இரண்டு மாத காலம்
2.ஆறு மாத காலம்
3.அமுதம் சிந்திய இடம்
4.ஒன்றரை மணி நேரம்
5.முப்பத்திமூன்று
6.ஒட்டியாணம்
7.திருவாரூர், ஸ்ரீ சைலம்.
8.காசி
9.சிதம்பரம்
10.திருவண்ணாமலை


தொடரும்..

Saturday, August 26, 2006

யாரின் பிரியம் எதில்??

யாரின் பிரியம் எதில்???

சொல்லுங்கள் பாப்போம்..விடைகள் மிகச் சுலபம்!!!

1. நமஸ்காரப் பிரியர் யார்?
2. அலங்காரப் பிரியர் யார்?
3. அபிஷேகப் பிரியர் யார்?
4. நைவேத்தியப் பிரியர் யார்?

விடைகள்:
1.சூரிய பகவான்
2.விஷ்ணு பகவான்
3.சிவபெருமான்
4.விநாயகர்

தொடரும்..

Friday, August 18, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள்- 10 ஆடல்

வாசகர்களே!! நடனத்தைப்ப் பற்றி ஞானம் கடுகளவும் இல்லாத நான் இப்பதிவை எழுதுவதற்காக என்னை மன்னிக்கவும். இங்கு நான் கற்ற சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கேள்விகளைப் படிக்கும் போது ' நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை..இவை எல்லாம் நம்மால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது' என்றே தோன்றும்... சுலபமான விடைகளை அறிந்தவுடன் நீங்களே சந்தோஷப் படுவீர்கள் பாருங்களேன்!!!

விடைகளுக்கு கீழே செல்லவும்

கேள்விகள்:
தாண்டவம்:
1. சிவபெருமான் காளிகா தாண்டவம் ஆடுவது எப்போது?
2. சிவபெருமான் சந்தியா தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
3. சிவபெருமான் சங்கார தாண்டவம் ஆடுவது எப்ப்போது?
4. சிவபெருமான் திரிபுர தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
5. சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
6. சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
7. சிவபெருமான் கௌரி தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
நடனம்:
8. அஜபா நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
9. உன்மத்த நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
10. தரங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
11. குக்குட நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
12. பிருங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
13. கமல நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
14. ஹம்சபாத நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?


பதில்கள்:

சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களைச் செய்யும் போது காளிகா, சந்தியா, சங்கார (சம்ஹார) தாண்டவம் ஆடியதாகக் கூறப்படுகிறது. இத்தாண்டவத்தைப் பற்றிய வரலாற்று கதைகளுக்கு பின்னூட்டப் பகுதியில் "காரியின்" விளக்கத்தைப் பார்க்கவும்.

1. காளிகா தாண்டவம் - படைத்தல் செய்யும் போது.
தலம் - நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி. ஆடிய இடம் - தாமிர சபை (Copper)

2. சந்தியா தாண்டவம் - காத்தல் செய்யும் போது.
தலம்- மீனாட்சி அம்மன் கோவில்,மதுரை. ஆடிய இடம் - வெள்ளி அம்பலம் (Silver)

3. சங்கார தாண்டவம் - அழித்தல் செய்யும் போது.
தலம்- மதுரை என்கிறார்கள் சிலர்.தெரிந்தால் சொல்லவும்.

4. திரிபுர தாண்டவம் - மறைத்தல் செய்யும் போது.
தலம்- குற்றாலநாதர் கோவில், குற்றாலம். ஆடிய் இடம் - சித்திர(Art) சபை.

5. ஊர்த்தவ தாண்டவம் - அருளல் செய்யும் போது.
தலம்- ஊர்த்தவதாண்டவர் கோவில், திருவாலங்காடு, ஆடிய இடம் - இரத்தின(gem) சபை.

6 ஆனந்த தாண்டவம் - இவ்வைந்து செயல்களையும் செய்யும் இடம்.
தலம்- நடராஜர் கோவில், சிதம்பரம். ஆடிய இடம் - கனக (Sky) சபை.

7. கௌரி தாண்டவம் - பார்வதிக்காக ஆடிய போது.
தலம்- திருப்பத்தூர்.

8. அஜபா நடனம்- சிவபெருமான் மேல்மூச்சில், கீழ்மூச்சில் (தவளை போல்) அசைந்தாடிய நடனம். ஆடிய தலம்- திருவாரூர். இது சம்பந்தப்பட்ட மிக சுவாரஸ்யமான கதையைப் பின்னூட்டப் பகுதியில் பார்க்கவும்.

9. சிவபெருமான் பித்தனைப் போல் தலை சுற்றி ஆடிய நடனம் உன்மத்த நடனம் ஆகும். ஆடிய தலம்- திருநள்ளாறு.

10.தரங்க நடனம் என்பது கடல் அலைபோல் அசைந்து ஆடுவது. இதை சிவபெருமான் நாகப்பட்டினத்தில் ஆடினார்.

11. குக்குட நடனம் என்பது கோழி போல் ஆடுவது. ஆடிய தலம் - திருக்காறாயில்.

12. பிருங்க நடனம் என்பது வண்டு மலரைக் குடைவது போல் ஆடுவது. இதை சிவபெருமான் ஆடியது இடம் திருக்கோளிலி ஆகும்.

13. கமல நடனம் என்பது தாமரை காற்றில் அசைவது போல் ஆடுவது. ஆடிய தலம்-திருவாய்மூர்.

14. ஹம்சபாத நடனம் என்பது அன்னம் போல் அடியெடுத்து ஆடுவது. ஆடிய தலம் - திருமறைக்காடு (வேதாரண்யம்)

தொடரும்..